• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை சொல்கிறார்கள் – வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி

Byகுமார்

Oct 28, 2021

மதுரை தனியார் மருத்துவமனை வளாகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மனித வளத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியபோது, வரும் 30ஆம் தேதி ஆளுநர் துணைவேந்தரை சந்திப்பதைத் பொருத்தவரையில் முதலமைச்சர் கருத்து தெரிவிப்பார்.

ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் முதன்மை அதிகாரிகளோடும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பேசி நல்லதொரு முடிவு எடுப்பார். நாளைய தினம் தமிழகத்தின் முதலமைச்சர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதற்காக நாளை மதுரை வருகை தருகிறார். மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

எந்த திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தார்கள், நாங்கள் அதை தடுத்தோம். என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். பொதுமக்கள் பயன்படக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். பத்திரிக்கை மற்றும் நாட்டு மக்கள் பாராட்டும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் நடத்தி பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றோம்.

தவறு எங்கே நடந்தது எங்கே முறைகேடு நடந்தது என்பதை தெளிவாக சொல்ல வேண்டும் எந்த காரணமும் இல்லாமல் குறை சொல்லக்கூடாது ஓ.பன்னீர்செல்வம் என்றார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்த காப்பீட்டு திட்டத்தைக் கூட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே குறை சொல்லி வருகிறார்கள். இந்த அரசை பற்றி நல்லபடியாக புரிந்து வைத்துள்ளார்கள் பொதுமக்கள் அதுவே எங்களுக்குப் போதுமான ஒன்று என தெரிவித்தார்.