• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நமது சினிமாவை கண்டு வட இந்தியாவில் பயப்படுகிறார்கள்.. அடி தூள் கிளப்பிய கமல்

Byகாயத்ரி

Sep 17, 2022

2022 ஆம் ஆண்டின் முக்கிய படமாக விக்ரம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதற்காக கோவையில் நேற்று ‘விக்ரம்’ படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . அப்போது பேசிய கமல்ஹாசன் “தென்னிந்திய சினிமாவின் பக்கம் இப்போது எல்லோரின் பார்வையும் திரும்பியுள்ளது. அதை நினைத்து வட இந்தியாவில் பயப்படுகிறார்கள். பல புதிய நடிகர்களை கவனித்து என்னிடம் இல்லாததை நான் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறேன். என்னை 63 ஆண்டுகளாக வாழவைத்தது சினிமாதான்.” எனப் பேசியுள்ளார்.