• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தனிநபர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

ByP.Thangapandi

Jan 1, 2025

ஸ்டாலின் 234 தொகுதி கூட்டணியோடு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என உசிலம்பட்டி பகுதி முழுவதும் தனிநபர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2025 புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் முழுவதும் உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டி கிராமத்தின் அருகில் முத்துப்பாண்டி நகர் நாகம்மாள் கோவில் பூசாரியாக உள்ளவர் மெட்ரோ முத்து. இவர் 2025 ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள், ஸ்டாலின் 234 தொகுதி கூட்டணியோடு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள், எதிர்க்கட்சி இல்லாத முதலமைச்சர் எனவும், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்க கேட்டுக் கொள்கிறோம், உசிலை மண்ணுக்கே சீட்டு கொடுக்கவும், உதயசூரியன் சின்னத்தில் மட்டும், உசிலம்பட்டியில் விரைவில் கலைஞர் அறக்கட்டளை அடிக்கல் நாட்டுவார் என தனிநபர் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.