• Fri. Jan 17th, 2025

அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சுற்றுச்சுவர்

ByP.Thangapandi

Jan 1, 2025

உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ரூ.10லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்ட எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டுமென பள்ளி மாணவ, மாணவிகள் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.10லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் அங்கயர்கன்னி முன்னிலையில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பங்கேற்று சுற்றுச்சுவர் கட்ட பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட நிர்வாகி பிரபு, முன்னாள் எம்எல்ஏ பாண்டியம்மாள், நகர செயலாளர் சசிக்குமார், நகர துணை செயலாளர் அழகுமாரி, ஒன்றிய செயலாளர்கள் ஜான்சன், கோஸ்மீன், அய்யனார்குளம் ஜெயக்குமார், சௌந்திரபாண்டி, வேங்கைமார்பன், ஆவின்சௌந்திரபாண்டி, மொக்கைவீரா, பால்பண்ணை பாண்டி, அமமுக சுப்புராஜ், எபி உள்ளிட்ட அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.