• Wed. Apr 24th, 2024

தேர்தல் செலவுக்கு சல்லி பைசா கிடையாது . . . தவிப்பில் வேட்பாளர்கள்

உள்ளாட்சித் தேர்தல் செலவுக்கு கட்சித் தலைமை பணம் வழங் காததால் அதிமுக வேட்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்.19-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. அதிமுக 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்தது.
இதனால் கட்சி மேலிடம் வேட்பாளர் களுக்கு தேர்தல் செலவுக்குப் பணம் வழங்கும் என வேட்பாளர்கள் எதிர் பார்த்தனர். ஆனால், கட்சி மேலிடம் பணம் வழங்க முடியாது எனத் தெரிவித்துவிட்டது.
இதனால் வசதி இல்லாத அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளுக்குப் பணமில்லாமல் தவிக்கின்றனர். கூட்டணிக் கட்சிகள் இருந்தால் தேர்தல் பணிகளில் அவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். தனித்துப் போட்டியிடுவதால் வேட் பாளர்களே அந்தந்த வார்டுகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
பிரச்சாரப் பணிகளுக்கு வரும் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோரது செலவுகளுக்கு வேட்பா ளர் செலவு செய்ய வேண்டி உள்ளது. தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் தனியார் நிறுவனங் களிடம் நன்கொடை வசூல் செய்ய இயலாது.
வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் முன்னாள் கவுன்சிலர்கள். மீதம் உள்ளவர்கள் புதிய வேட்பாளர்கள். இவர்களில் பலர் பண வசதியின்றி உள்ளனர். அதனால் இவர்கள் சொந்தப் பணத்தை செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இதே போல சோழவந்தான் தொகுதியில் மாணிக்கம் அதிமுக சார்பில் போட்டியிட்ட போது அதிமுக தலைமை பணம் வழங்காமல் , தனது தோல்விக்கு அதிமுக தலைமை தான் காரணம் என்று கூறினார். ஓட்டுக்கு பணம் வழங்க டோக்கன் விநியோகம் செய்து பிறகு பணம் கொடுக்காமல் தொகுதிக்குள் செல்ல முடியாமல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிருப்தியில் தான் பாஜகவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த உள்ளடி வேலைகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு முக்கிய பங்கு உண்டு என்பது கூடுதல் தகவல் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *