அம்பேத்கர் நினைவு நாளான இன்று, கோவையில் தவெக தலைவர் நடிகர் விஜய் அம்பேத்கர் குறித்த நூலை வெளியிடுகிறார். இவ்விழாவை முன்னிட்டு, கோவையில் ஒட்டப்பட்டுள்ள தவெக போஸ்டாரில் 2026ல் சாணக்கியர் ஆட்சி எனக் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அம்பேத்கர் நினைவு நாளான இன்று சென்னையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற அம்பேத்கர் குறித்தான நூலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இதற்காக அறிவிப்பு வந்தததில் இருந்து பல்வேறு கருத்துக்கள் அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தன.
இந்நிலையில் சட்ட மேதையின் ஆசி… 2026 சாணக்யர் ஆட்சி… என தவெக கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற நூலின் தலைப்பும் அம்பேத்கர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு அந்த நூலை வழங்குவது போன்றும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் கோவை மாநகரில் தண்டுமாரியம்மன் கோவில் அருகில், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இந்த போஸ்டர் கலாச்சாரம் அவர் ரசிகர்களிடையே தலைதூக்கியது. கடந்த 2023 ஆம் ஆண்டு லியோ திரைப்படம் வெளியாகும் போது விஜய் ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும் கொண்டாட்டங்களை தொடங்கினர். அப்போது கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.