

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு மலையாண்டி தியேட்டர் எதிரே உசிலம்பட்டி நகராட்சியின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வான் நோக்கி பீச்சி அடித்து நெடுஞ்சாலையிலும், சாக்கடை கால்வாயிலும் சென்று வீணாகியது.
இதே போல் தேனி ரோடு முருகன் கோவில் அருகிலும், கவணம்பட்டி சாலையில் நீதிமன்றம் முன்பாகவும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

அவ்வப்போது உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து குடிநீர் திறப்பை நிறுத்தி வைத்துவிட்டு உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், நகராட்சியின் பல பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வரும் சூழலில் சாலை அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைபடும் நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
அடிக்கடி குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விணாகி வரும் சூழலில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாக உள்ளது எனவும், சாலை அமைக்கும் பணிகளின் போது உரிய அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து உடனுக்குடன் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

