


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் ஒன்றிய தி.மு.க சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண் டியன் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார் .
ஒன்றியச் செயலாளர் பால. ராஜேந்திரன், சுந்தரபாண்டி. திரவியம், பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் வரவேற்றார். பொதுமக்கள், பயணிகள், வியாபாரி
களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், ஒன்றிய பிரதிநிதி முருகன், ராம் மோகன், பன்னீர், குப்புசாமி, மருதுபாண்டியன், ராஜசேகரன், வினோத், குமார், கணேசன் உள்பட கலந்து கொண்டனர். முடிவில், கவுன்சிலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.

