• Tue. Feb 18th, 2025

பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு

ByTBR .

Jun 1, 2024

விவேகானந்தர் பாறையில் தியானத்தை முடித்துக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், வானிலையை பொறுத்து ஹெலிகாப்டருக்கு பதிலாக சாலை மார்க்கமாக செல்லவும் மாற்று ஏற்பாடு உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பிரதமரின் பயணத் திட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.