விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று தியேட்டர்களில் ரிலீசானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
முதலில் வரும் சமந்தா செம கிளாமரான உடைகளில் வருவார். யப்பா…என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு இருக்கும். அடுத்த சீனிலேயே நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். அந்த அளவில் ரொம்பவே மெலிந்து டல்லடித்து காணப்படுகிறார். அண்ணாத்த படத்தில் இருந்ததை விடவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இதனால் ரசிகர்கள், ஏன் என்னாச்சு நயன்தாராவுக்கு. ஏன் இப்படி ஆகி விட்டார் என கேட்டு வருகின்றனர். மேலும், நயன்தாராவின் மார்க்கெட் வால்யூ முன்பை விட தற்போது கொஞ்சம் குறைந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது.