• Fri. Mar 29th, 2024

தேனி: எதை விட்டுக் கொடுத்தார் மனைவிக்கு…?- கணவர்

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 31வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும், கடைசி நேரத்தில் தனது மனைவிக்கு விட்டுக் கொடுத்த கணவரின் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 19ல், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேனி மாவட்டத்தில், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளுக்கான, கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.,- அ.தி.மு.க.,- ம. நீ.ம. – அ.ம.மு.க.,- வி.சி.க., மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 234 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆண்களை விட, பெண் வேட்பாளர்கள் அதிகளவு போட்டி, போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க., சார்பில் 31வது வார்டில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் மணவாளன் கடைசி கட்டத்தில் திடீரென மனம் மாறி, தனது மனைவி லதாவை களத்தில் குதிக்க வைத்தார்.

மணவாளன் போட்டியிட மறுத்ததற்கு என்ன காரணம், இதன் பின்னணி என்னவாக இருக்கும் என புரியாமல் அ.தி.மு.க., வேட்பாளர்களை குழம்பத்தில் ஆழ்த்தியது. கட்சி மேலிடத்தில் இவர் ‘விசுவாசி’ யாக இருந்ததால், ஒ.பி.எஸ்., பேச்சை கேட்டு ‘ஜஹா’ வாங்கியிருக்கலாம் என, கட்சியினரிடையே முணுமுணுத்ததை காணமுடிந்தது.

அதுவும் முன்னாள் கவுன்சிலரான லதா, ‘வாகை’ சூடும் பட்சத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்களின் எண்ணிக்கையாவது சற்று அதிகரிக்க, இதுவும் ஒரு காரணமாகவும் இருக்கலாம், எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து விபரமறிய, ‘மணவாளனை அலைபேசியில் இரண்டு முறை தொடர்பு கொண்டபோது’ அவர்…. Attend…பண்ணவில்லை.

வாய்ப்பு கிடைத்தும் மனைவிக்கு விட்டுக் கொடுத்த, மணவாளனின் ‘மர்மம்’ புரியாத, புதிராகவே உள்ளதாக, வார்டு மக்களிடையே பேச்சு அடிபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *