• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனி: வீரபாண்டியில் தொழுநோயாளிகளுக்கு
மருத்துவ மறுவாழ்வு முகாம்

தேனி மாவட்டம், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஊனத் தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம், தேனி அருகே வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.

வீரபாண்டியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, துணை இயக்குனர் (தொழுநோய் பிரிவு) டாக்டர், ரூபன் ராஜ் தலைமை வகித்தார். வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். தொழுநோய் நல கல்வியாளர்கள் வேல்முருகன், தர்மேந்திர கண்ணன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள் முருகமணி, வெங்கடேஸ்வரன், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ்வரன், பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நோயின் தன்மைக்கு ஏற்ப நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழு நோயாளிகள் அனைவருக்கும் சுகாதார ஆய்வாளர்கள் தாமரைக் கண்ணன், சுல்தான் இபுராஹிம் ஆகியோர் முயற்சியில் கம்பம் புதுப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பழனியம்மாள், பிரதீப் ஆகியோர் சொந்த செலவில் போர்வை வழங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் அரசு சார்பில் தொழுநோயாளிகளுக்கு கண்கண்ணாடி மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது.