• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனி அல்லிநகரம் நகராட்சி கிளை கூட்டம்..

தேனி அல்லிநகரம் நகராட்சி கிளை கூட்டம் வரும் ஏப்ரல் 16ம் தேதி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கௌரவ தலைவர் பிச்சைமுத்து தலைமையில் நடைபெறும் என்றும் தொழிலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டமானது, தேனி TUC தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் கூட்டத்தில், ஏப்ரல் 20ம் தேதி, சென்னை கோட்டையை நோக்கி பயணம், தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தல் மற்றும் கோரிக்கை விளக்க ஆர்பாட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சி கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயித்து, பணி நிரந்தரப்படுத்த வேண்டும், வார விடுமுறை ஊதியத்துடன் வழங்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.