• Fri. Mar 29th, 2024

அப்போ கச்சத்தீவு .. இப்போ முல்லை பெரியாறு.. கொந்தளிக்கும் ஓபிஎஸ்

Byகாயத்ரி

Feb 16, 2022

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையின் போது கூறியதாவது, “உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்.!’ என்று கூறிக்கொண்டு ஏற்கனவே திமுக கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டது. தற்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முல்லை பெரியாறு அணை பகுதியில் தண்ணீரை திறந்து விடுவது பார்வையிடுவது அதனை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் எங்கு சென்று முடிய போகிறது என்று தெரியவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் கேரள அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி தலைவர்கள் முன்னிலையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோதே தமிழக அரசின் உரிமை கேரளாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தற்போது கேரள அரசின் சார்பில் சில அதிகாரிகள் வந்து முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு அதன் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது மாபெரும் துரோகம் என்று கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து கேரள அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *