காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சூரசம்கார நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காரைக்கால் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இரவு அங்கேயே தங்கியிருந்து ராகு கால வேளையில் அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் கோயில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை ஒருவர் திருடிக் கொண்டு பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பித்துள்ளார். இதனைக் கண்ட பெண் ஒருவர் அப்பகுதி மக்கள் உடன் சேர்ந்து அவரை பிடித்து போலீஸ் ஒப்படைத்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12,000 மதிப்புள்ள குத்துவிளக்கை பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பகுதி மக்கள் “புகழ்பெற்ற அம்பகரத்தூர் கோவிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களான கண்காணிப்பு கேமரா 5 மாஸ் லைட் உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ள எனவும் இவைகளை கவனிக்க வேண்டிய தனி அதிகாரி வேலை பளு காரணமாக இக்கோவிலை கண்காணிக்க தவறிவிட்டார் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் அந்த குத்து விளக்கு வருடத்திற்கு 6 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் இருந்தபோதிலும் அந்த விளக்கை பாதுகாப்பாக வைக்காமல் கோவில் மண்டபத்தில் வைத்திருந்ததாலயே இந்த திருட்டு நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.