தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் அனந்த ராமன். இவர் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலையில் பென்னிகுவிக் நர்சரி தோட்டம் வைத்து இரும்பு தளவாடப் பொருட்கள், விவசாயத்திற்கு தேவையான தென்னை கொய்யா வாழை உள்ளிட்ட நாற்றுகள் மற்றும் பூச்செடிகளை விற்பனை செய்யும் மையம் அமைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணிகளை நர்சரி தோட்டத்தை பூட்டி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இன்று காலை வழக்கம் போல் நர்சரி தோட்டத்திற்கு வந்த தொழிலாளர்கள் தோட்டத்தில் மெயின்கேட் பூட்டு மற்றும் அலுவலக கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நர்சரி தோட்டத்தின் உரிமையாளருக்கும் உத்தமபாளையம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை செய்ததில் தோட்டத்தின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஏற்றும் மினி லாரி (பிக்கப் வாகனம்) தோட்டத்திற்கு வேலி அடைக்கும்.

இரும்பு தளவாட பொருட்கள் ரூபாய் ஐந்தாயிரம் ரொக்க பணம் அலுவலகத்திற்குள் இருந்த டிவி சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகும் கம்ப்யூட்டர் கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு என ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றிருப்பது தெரிய வந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)