• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை குருபூஜை..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாகமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் சட்டமன்றஉறுப்பினர் கருப்பையா தலைமைதாங்கி தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செய்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ஹரிஷ் கிருஷ்ணமூர்த்தி கார்த்தி தனசேகர் சரவணன் தியாகராஜன் தாமு தம்பா கழக நிர்வாகிகள் கொரியர் கணேசன் அரியூர் ராதாகிருஷ்ணன் ரஞ்சித் குமார் புகழ் பாண்டி மாணிக்கம் பசு மணி மங்கள மூர்த்தி பரத் அய்யனார் மகளிர் சுஜா லட்சுமி காயத்ரி காளீஸ்வரி மற்றும் கார்த்தி முத்து அசோகன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை பரத், நிர்மல் குமாரஆகியோர் செய்திருந்தார்.