• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சர்வதேச அளவிலான மிஷன் சக்தி செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு , திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் இருவர் தேர்வு..,

ByKalamegam Viswanathan

Aug 6, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மோனிகா, ஜமீலா ஆகிய இரு மாணவிகள், சர்வதேச அளவிலான மிஷன் சக்தி செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு தேர்வாகி உள்ளதையொட்டி, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொள்வதற்காக ,ரோட்டரி கிளப் ஆப் விருதுநகர் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் அவர்கள், இரு மாணவிகளுக்கு உண்டான செலவினங்களுக்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் , ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கி கௌரவித்தனர்.

இதனை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் அரிமா சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்த இரு மாணவிகளுக்கும் நொய்டா – வில் பயிற்சி அளிக்க உள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபரில் அந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.