தனியார் தொழிற்சாலைக்கு நிலத்தடி நீர் கடத்துவது தொடர்பாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஈச்சங்காடு மேட்டில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து டிராக்டர்கள் மூலம் நிலத்தடி நீர் கடத்தப்படுகிறது. இது தொடர்பாக வழங்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.