கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை, மகன் உதவியுடன் மனைவி கொலை செய்து உடலை 22 துண்டுகளாக வெட்டி வீசியுள்ள சம்பவம் டெல்லியை பதற வைத்துள்ளது.
டெல்லி கிழக்கில் உள்ள பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவருடைய மனைவி பூனம். இந்தத் தம்பதியின் மகன் தீபக். இந்நிலையில், அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொடர்பை கைவிடும்படி மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை.
இதனால் பூனம், கணவரை கொல்ல முடிவு செய்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம், மகன் உதவியுடன் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தார். பின்னர், கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். வெட்டப்பட்ட உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்தார். உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசினார் நள்ளிரவில், தீபக் கையில் பையுடன் செல்வது தெரிந்தது. அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்தனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. தற்போது அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.