• Fri. Nov 8th, 2024

கணவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி

ByKalamegam Viswanathan

Oct 29, 2024

அலங்காநல்லூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி கைது செய்து, தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கரட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சரவணன் (30) என்பவர், செங்கல் காளவாசலில் லோடுமேன் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி ஜோதிகா (23) மற்றும் அலங்காநல்லூர் வலசை பகுதியை சேர்ந்த உடப்பன் (22) ஆகியோருக்கு கடந்த ஒரு வருடமாக தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதனால் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டனர். பின்னர் இருவரையும் தேடி கண்டுபிடித்து இரு தரப்பினரிடம் பேசிய உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜோதிகா தனது கணவரான சரவணன் உடன் மீண்டும் சேர்ந்து வசித்து வந்தார்.

இந்நிலையில், கள்ளத் தொடர்பில் இருந்த உடப்பன் இன்று அதிகாலை தனது நண்பருடன் சேர்ந்து சரவணன் வீட்டிற்கு சென்று, கள்ளக்காதலி ஜோதிகாவுடன் சேர்ந்து சரவணனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் மனைவி ஜோதிகாவும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் கேள்விப்பட்டு உடனடியாக வந்த அலங்காநல்லூர் போலீசார் கொலையான சரவணன் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலைக்கு காரணமான சரவணன் மனைவி ஜோதிகாவை கைது செய்தனர். ஜோதிகாவின் கள்ளக்காதலன் உடப்பன் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொடூரக் கொலை சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *