

சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. கத்திரி வெயில் துவங்கும் முன்பே வெயில் அதிகமாக காணப்பட்டது. தற்போது கத்திரிவெயில் துவங்கியுள்ள நிலையில் பல இடங்களில் வெயில் சதத்தை தாண்டியும் சுட்டெரிக்கிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.
இந்நிலையில் அதிக வெயில் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கருப்பு நிற கவுன் கூடுதலாக வெப்பத்தையும்,வெக்கையும் ஏற்படுத்தகூடியது. சென்னை வழக்கறிஞர்கள் சங்க கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார். எனினும்,வழக்கறிஞர்கள் கட்டாயம் கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டையை அணிய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
