• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையத்தில் அருள்மிகு சொக்கர்- மீனாட்சி திருக்கல்யாணம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலில் மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரு பகுதியாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை ஒட்டி இன்று இந்த சொக்கர் கோவில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு உபயதாரர் ஏற்பாட்டில் காலையிலிருந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அந்தணர்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாணத்தில் இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தங்கள் தாலிக்கு புதிய மஞ்சள் கயிறுகளை மாற்றி வழிபட்டனர்.