• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் பற்றி ஜெயலலிதா பேசிய வீடியோ வைரல்

ByA.Tamilselvan

Jul 11, 2022
ஓபிஎஸை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும்  என்று தற்போது நடைபெற்றுவரும்பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் ஓருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  அடிப்படை  உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து  ஒ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம் ,ஜேசிடி  பிரபாகரன்,மனேஜ் பாண்டியன் ஆகியோரை நீக்கி தீர்மானம் நிறைவெற்றப்பட்டுள்ளது.

 இந்நிலையில் ஓபிஎஸ் குறித்து ஜெயலலிதா பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.
                 ஓபிஎஸ்  அதிமுகவில்  எப்படி படிப்படியாக  வளர்ந்தார் என்று     முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய  வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் " கட்சியில் சேர்வதும் அதில் வளர்வதும் இன்ஸ்டன்ட் காபி போடுவது போல  இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் 1977 ம் ஆண்டு ஓபிஎஸ் கட்சியின்  உறுப்பினராக சேர்ந்ததில்  இருந்து  தமிழகத்தின் முதல்வரானது வரை  அவர் கடந்து வந்த பாதையை கூறி பாராட்டியுள்ளார்.
            இப்படி ஜெயலலிதவால் பாராட்டப்பட்ட ஓபிஎஸ் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.