• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரபஞ்சம் இவ்வளவு அழகா -ஜேம்ஸ்வெப் எடுத்தபடம்

ByA.Tamilselvan

Jul 12, 2022

நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தை மிக அழகாக படம் எடுத்து அனுப்பியுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி . அந்த படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது. இதன்படி ஐரோப்பா மற்றும் கனடாவில் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா உருவாக்கியது. சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி, கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜேம்ஸ்வெப் தொலை நோக்கி எடுத்த முதல்படம் -பிரபஞ்சத்தின் அழகு


பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் முதலாவது வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று இரவு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் கமலாஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டூவிட்டர் பதிவில், ‘இன்று வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சி. அது நமக்கு கண்ணுக்கு தெரியாத விண்மீன் திறள்களை காட்டுகிறது என தெரிவித்துள்ளது.