• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கியபோது, மக்களுக்கு இருந்த பயத்தின் காரணமாக யாரும் தடுப்பூசி போட்டுகொள்ள முன்வரவில்லை.

பல நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏராளமான நாடுகளுக்கு நன்கொடையாகவும் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தியபோது, தடுப்பூசியின் தேவை அதிகரித்தது. எனவே, மார்ச் மாதத்தில் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டு, பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

அதன்பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு, தடுப்பூசி உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறுகையில், அடுத்த மாதம் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பயோலாஜிக்கல்-இ மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளை சந்தைக்கு கொண்டு வருகின்றன. எனவே, வேக்சின் மைத்ரி திட்டத்தின்கீழ் உலகிற்கு உதவுவோம் என்ற திட்டத்தின்கீழ், உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளர்