• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

அவதார் இரண்டாம் பாகத்தின் தலைப்பு?

இயக்குனர் ஜேம்ஸ் காமரூனீன் கனவுப் படைப்பான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியானது. இருபத்தி நான்கு கோடி டாலர் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 284 கோடி டாலர் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சுமார் 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது ‘Avatar 2: the way of water’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.