• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகும் பாலிவுட் பிரபலம்!

தீபிகா படுகோன் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். தற்போது வரை மூன்று முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 செல்வாக்குமிக்க ஆட்களில் ஒருவராக தீபிகா படுகோன் அறிவிக்கப்பட்டார். ஆரம்பகால கட்டத்தில் தனது சக நடிகரான ரன்பீர் கபூருடன் காதலில் விழுந்தார். பின்னர், இருவருக்கும் இடையிலிருந்த காதல் முறிந்தது. அதன்பின்னர் ரன்வீர் சிங்குடன் காதல் ஏற்பட்டு 2018ஆம் ஆண்டு இந்திய சம்பிரதாயப்படி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

75 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா கூடிய விரைவில் துவங்க உள்ளது. இந்த திரைப்பட விழாவில் தீபிகா படுகோன் நடுவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது ஒரு இந்தியருக்கு கிடைத்துள்ள கௌரவமாக பார்க்கப்படுகிறது. இவர்களோடு வேறு சில நாடுகளில் இருக்கும் அரிய திரை கலைஞர்களையும் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை பெயர் குறிப்பிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழா தங்களது அதிகாரபூர்வ வலைத்தளங்களில் இந்த தகவலை பதிவிட அதை தீபிகா படுகோன் ஷேர் செய்துள்ளார். அதோடு தனக்கு இந்த கௌரவத்தை கொடுத்ததற்காக ” நமஸ்தே ” எமோஜி சேர்த்துள்ளார். இதைப் பாராட்டும் விதமாக அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் ” வாவ் ” எனும் எமோஜி போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.