திட்டம் போட்டு டிஜிட்டல் கூட்டம் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது எச்சரிக்கையா இல்லாவிட்டால் நமக்கு பணம் போய்விடும்.
இன்றைய நவீன யுகத்தில் விதவிதமாக டிஜிட்டல் முறையில் நம்மிடம் இருக்கும் பணத்தை பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகநூல் இன்ஸ்டாகிராம் மற்றும் ஜிபி போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலமாக நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை திருடன் முயற்சிப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ அந்த கிளிக் ஒன்றை நாம் தொட்டால் நமது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணம் முழுவதும் இணைய வழி மோசடி கும்பலிடம் சென்று விடுகிறது. இதற்கு நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்பொழுது புதிதாக இன்று முதல் ஒரு மோசடி ஆரம்பித்து உள்ளார்கள். ஆம் பிரதமர் புகைப்படத்தை போட்டு பாரத ஜனதா கட்சி சார்பாக உங்களுக்கு இப்ப கூகுள் ப்ளே phonepe பேடிஎம் காடை ஸ்காட் செய்து கிளிக் செய்தால் போதும் உங்களுக்கு 675 ரூபாய் முதல் உங்கள் வங்கி கணக்கில் வரகு வைக்கப்படும் என முகநூல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் இணைய வழி மோசடி கும்பல் வைத்துள்ளார்கள்.
இதை தெரிந்தோ, தெரியாமலோ நாம் தொட்டுவிட்டால் நமது வங்கி கணக்கு மற்றும் நமது கைபேசியில் உள்ள அனைத்து விவரங்களும் உள்ள விவரங்கள் அனைத்தும் இணைய வழி மோசடி கும்பலிடம் சென்று விடும். இதனால் நம் பணம் மட்டும் இழப்பதில்லாமல் நமது நிம்மதி அனைத்தையும் இழக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை தடுப்பதற்கு நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்று ஏதேனும் பணம் வருகிறது என்று நீங்கள் எக்காரணத்தை கொண்டும் அந்த லிங்கை கிளிக் செய்யக் கூடாது. இதேபோன்று வெளிநாட்டு அழைப்புகள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை நாம் எக்காரணத்தை கொண்டும் அந்த அழைப்பை ஏற்கக்கூடாது. அதில் உங்களது தொலைபேசி எண் வெரிஃபிகேஷன் என தகவல் தெரிவிப்பார்கள் ஒன்றை ஆபத்துக்கள் அல்லது ஒன்பதாம் நம்பரை அழுத்துங்கள் என கூறுவார்கள்.
அதனை நம்பி நாமும் அழுத்தி விடுவோம். இதனால் நமது கைப்பேசியில் உள்ள அனைத்து விவரங்களும் இணைய வழி மோசடி கும்பலிடம் சென்று விடும். மிக மிக எச்சரிக்கையாக நாம் தான் இருக்க வேண்டும் என இதைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்துலையோ அல்லது சைபர் கிரைம் காவல்துறையிடமோ தொலைபேசி 1930 என்கின்ற சைபர் கிரைம் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் நாம் இழப்பது பணம் மட்டுமல்ல நிம்மதியும்தான் இருக்காது. மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம்தான். திருடர்கள் திட்டம் போட்டு திருடி கொண்டு தான் இருக்கும் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.