• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது

ByJeisriRam

Jul 3, 2024

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது,

தேனி அல்லி நகரத்தில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக முன்பாக இன்று தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வித்துறை அரசாணை 243 ரத்து செய்ய வலியுறுத்தியும், பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை கலந்தாய்வு நடவடிக்கை நிறுத்தி வைக்க கோரியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை மாற்றுப் பணி செல்ல விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தி வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.