• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி..!

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 11 லட்சத்தி 7 ஆயிரத்து 347ரூபாய் ரொக்கப்பணமும், 3கிராம் தங்கமும், 12 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற அம்மன் வழிபாடு கோயில்களில் ஒன்று. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில். இந்த கோவிலில் மொத்தம் 17 உண்டியல்கள் கோவிலின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. குமரி பகவதி அம்மனை இந்தியா முழுவதும் உள்ள பன் மொழி மக்கள் மட்டும் அல்ல சர்வதேச சுற்றுலா பயணிகளும் தினம் பகவதி அம்மனை தரிசிப்பதோடு பணம், வெள்ளி, தங்கம் ஆகிய உலேகங்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 17 உண்டியல்களும் நேற்று (நவம்பர் -6)ம் நாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ,உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில் திறக்கப்பட்டது.
நேற்று காலை முதல் மாலை வரையிலான காலத்தில் மொத்த உண்டியல்கள் எண்ணப்பட்டத்தில். ரூபாய் 11 லட்சத்தி 7 ஆயிரத்து 347 காணிக்கையாக கிடைத்திருந்தது. இதனை கடந்து வெளி நாட்டு பணத்துடன், தங்கம் 3 கிராம், வெள்ளி 12 கிராமமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. குமரி தேவஸ்தான பணியாளர்கள் மட்டும் அல்லாது, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆதிபராசக்தி மன்றத்தை சேர்ந்த ஆண், பெண் என 100-க்கும் அதிகமான பேர் குமரி பகவதியம்மன் கோவில் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.