• Mon. Apr 29th, 2024

கன்னியாகுமரியில் சிஐடியு மகளிர் தேசிய மாநாடு..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிஐடியு பிரிவின் மகளிர் கட்டிட தொழிலாளர்கள் தேசிய மாநாடு கன்னியாகுமரியில் காம்ரேட்மைதிலி சிவராமன் அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து கட்டிட கூலி பணியாளர்கள் அமைப்பை சேர்ந்த 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
இந்நிகழ்வில்  தலைமை உரையாற்றிய தோழர் சீலா அலைக்ஸ் பேசியதாவது..,
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்திய நாடு இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, பார்சிகளுக்கு வாழ்வதற்கு உரிமை அற்ற நாடு, இந்துக்களுக்கு மட்டுமே உரிமையான நாடு ராமநவமி போன்ற விழாக்கள் மட்டுமே உரிமை பெற்ற விழாக்கள் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் சூழலை  உருவாக்க முயலும் இந்த நிலையை மாற்ற வேண்டும். 
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு, பேச்சு எழுத்து உரிமை பெற்ற நாடாக மாற்றும் வகையில், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில்  இன்று மத்தியில் ஆளும் மதவாத மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியினை இந்த உழைக்கும் பெண்கள் மாநாட்டில் உறுதி ஏற்று களத்தில் பயணிப்போம் என பேசினார்.
கன்னியாகுமரியில் நடந்த மகளிர் சிறப்பு மாநாட்டில். குமரியை சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் மற்றும் குமரி மாவட்ட பொருப்பாளார்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *