பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தில், தூண்களில் இரும்பு கம்பிகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதில் கான்கிரீட் கலவைகள் சேர்க்கும் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படுகிறது. இதற்காக தற்போதுள்ள தூக்கு பாலத்தின் அருகில் கடலுக்குள் பெரிய இரும்பு குழாய்கள் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி முடிவடையும்வரை தூக்குப்பாலத்தை கப்பல்கள் மற்றும் பெரிய மீன்பிடி விசைப் படகுகளும் கடந்துசெல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.