வணிக வரித்துறையில் 100-க்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலர்களை கோட்ட மாறுதலை செய்ததைக் கண்டித்து வணிக வரிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக தன்னெழுச்சியாக காலை 11.00 மணியளவில் மதுரை வணிக வரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லெட்சுமி நாராயணன் நமக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம் மற்றும் வணிகவரி அலுவலர் சங்கம் என்ற அமைப்பும் சேர்ந்து செயல்படுகிறது.
வணிகவரித்துறையில் கடந்த 15ஆம்தேதி வணிகவரி ஆணையரின் ஆணைப்படி 70 மாநில வரி அலுவலர், 30 உதவி மாநில அலுவலர் மற்றும் 30 டிரைவர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு அரசு ஊழியரின் பணியிட மாறுதல் என்பது மார்ச், ஏப்ரல், மே என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பணியட மாற்றம் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.அது சம்பந்தமாக விசாரிக்கும்போது வணிகத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரின் தலையிடுதலும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பத்திரப்பதிவுத் துறையில் அமைச்சர் சொல்லி பல பணியிடை நீக்கம் மற்றம் பணிமாறுதல்கள் நடந்துள்ளதாக தகவல் உள்ளது.இப்போது இந்த பணியிட மாறுதலும் அதன் அடிப்படையில் தான் என்று வணிக வரித்துறை அலுவலர்கள் வருந்துகின்றனர். வணிகவரித்துறை ஆணையர் சிலர் வரி எய்ப்பு செய்யும் நிறுவனங்களிடம் சோதனை செய்ய உத்தரவிட்டுருந்தார்.
அதன்படி அந்நிறுவன உரிமையாளர்கள் ஆளும்கட்சிக்கு சொந்தமான நிறுவனங்களாக இருந்தால் வணிகத்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் அலுவலர்களை திரும்பி வரசொல்வதாக தெரிவித்தார். எனவே இந்த பணியிடம் மாறுதல் தவறான நபர்களை தான் மாற்றம் செய்தோம் என்று நினைத்தால் முறையான விசாரணையின் பேரில் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் அதில் மாற்று கருத்து இல்லை என கூறியுள்ளார்.
வணிக வரித்துறையில் செயலாக்க பிரிவு என்பதின் நோக்கம் வரி எய்ப்பு செய்பவர்களை கண்டுப்பிடித்து அரசாங்கத்திற்கு வர வேண்டிய வரி பணத்தை பெற்றுதருவதுதான்.அவர்கள் சுதந்திரமாக செயல்ப்பட்டால் தான் அரசாங்கத்திற்கு வரி கிடைக்கும்.
இதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்தால் இந்த செயலாக்க பிரிவே இல்லாமல் போய்விடும்.இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வணிகவரி சங்கம் சார்பில் அந்தந்த துறை செயலாளர்கள்,முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவருக்கும் பெட்டிஷன் கொடுத்துள்ளதாக தெரித்துள்ளார்.
முதலமைச்சர் அவர்கள் பதவி ஏற்று சொன்ன முதல் விஷயம் அமைச்சர்கள் அரசு அலுவலர்களின் பணியிட மாறுதல்கள் பற்றி வெளிப்படைத் தன்மையுடன் நடந்த கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.ஆதலால் முதலமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பது வணிக வரித்துறை அலுவலர்களின் கோரிக்கை ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.