• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதிய இந்தியாவின் வலுவான தூண் ராமர் கோவில் – மோடி!..

By

Aug 20, 2021

குஜராத் மாநிலத்தில் சோம்நாத் பகுதியில் பார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சோம்நாத்தில் ரூ.30 கோடி மதிப்பில் சிவபார்வதி கோயில் சோம்பரா சலத்ஸ் முறையில் கட்டப்பட உள்ளது.

இதனையடுத்து, பேசிய பிரதமர் மோடி ‘ நாம் மத சுற்றுலாக்களை வலுப்படுத்த வேண்டும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும். அவர்களும் நமது கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறுவார்கள். நம்பிக்கையை பயத்திலிருந்து ஒடுக்க முடியாது. நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் இந்தியாவின் ஒருங்கிணைப்பு இயக்கம் பற்றி பேசிய அவர், “அது வெறும் புவியியல் மற்றும் கருத்தியல் தொடர்பு பற்றியது அல்ல. ஆனால் நமது வரலாற்றின் பாரம்பரியத்துடன் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழி. நமது புதிய இந்தியாவின் வலுவான தூணாக ராமர் கோவில் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பிரதமர் மோடியால் துவக்கப்பட்ட திட்டங்களில் சோமநாத் கண்காட்சி மையம், சோம்நாத் ப்ரோமெனேட், பழையசோமநாத்தின் புனரமைக்கப்பட்ட கோவில் வளாகம் மற்றும் பார்வதி கோவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய சுற்றுலா அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.