கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புதிதாக பொறுபேற்ற மத்திய ஐ.டி.துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஐந்து நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான ஹிமாச்சலுக்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அளித்த அவர், “கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய அரசு ரூ.23,123 கோயை ஒதுக்கியுள்ளதாகவும்” அவர் கூறினார்.
கொரோனா முதல் இரண்டு அலையில் பெரியவர்களை பாதித்தது போல, மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதனால் மத்திய அரசு சார்பில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.