• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பாலியல் தொல்லை கொடுத்த திமுக ஊராட்சி தலைவர் மகன் ..மகளுக்காக தீக்குளிக்க முயன்ற தாய்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக ஊராட்சி தலைவர் மகன் மீது நடவடிக்கை கோரி தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் இருக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனது 16 வயது மகளைக் கடந்த ஒரு வருட காலமாகத் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய திமுக ஊராட்சி தலைவரின் மகன் மற்றும் நீதி கேட்டுச் சென்ற பொழுது தங்களைத் தாக்கிய திமுக தலைவரின் உறவினர்களையும் உடனடியாக கைது செய்யக் கோரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீ குளிக்க அவரது தாய் முயன்றுள்ளார். மேலும் அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டனர்.

இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில் தமிழகத்தில் தினந்தோறும் திமுகவினரின் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீ குளித்தால் தான் நீதி கிடைக்குமா? கட்சியில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல், சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று முதல்வர் முழங்குவதால் எந்தவித பயனும் இல்லை. பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க இந்த அரசு உடனடியாக வழிவகை செய்யவேண்டும். கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தமிழக பாஜக தயங்காது என அவர் தெரிவித்துள்ளார்