• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணமான அமித்ஷா, மோடியின் செயலுக்கு காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்…

பாராளுமன்றத்தில் நேற்று 13-12-2023 தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நுழைந்த சற்று நேரத்திற்குள் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தவும், ஜனநாயக பாதுகாப்பை கேள்வி குறியாக்கிய பாஜக அரசின் MP பிரதாப் சிம்ஹா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், ஜனநாயகத்தின் முதுகெலும்பான பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாத மோடி அரசு பதவி விலக வலியுறுத்தியும், திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் கமிட்டி திருவட்டார் மேற்கு வட்டார தலைவர் T.வினுட்ராய் தலைமையில், 14-12-2023 மாலை 7 மணியளவில் குலசேகரம் அரசுமூடு சந்திப்பில் வைத்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
மாநில நிர்வாகிகள், மாவட்ட, வட்டார, பேரூர், ஊராட்சி, வார்டு தலைவர்கள், நிர்வாகிகள், பேரூர் மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், காங்கிரஸ் பேரியக்க
துணை அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்கத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டவர்கள் நாடாளுமன்றத்தின், அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாது காப்பற்ற நிலைக்கு காரணமான, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என கண்டன கோசமிட்டனர்.