• Mon. Apr 21st, 2025

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாலாலயம்..,

ByKalamegam Viswanathan

Apr 9, 2025

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெறும் என சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு அறிவுருத்தியிருந்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பகோணம் 20 கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதால் அதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.தற்போது கோவில் ராஜகோபுரம் கோவில் மண்டபங்களில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.நிலையில் மூலஸ்தானத்தில் கும்பாபிஷேக பணிகள் தொடங்குவதற்காக கடந்த ஏழாம் தேதி கோவில் மூலஸ்தான நடை சாத்தப்பட்டது.தொடர்ந்து திங்கட்கிழமை முதல் திருவாச்சி மண்டபத்தில் சிறப்பு தியாகசாலை பூஜை நடைபெற்று வந்தது நிலையில் மூலவர்களுக்கான பாலா ஆலயம் செய்யும் நிகழ்ச்சி இன்று விமர்சியாக நடந்தது.

காலை 5 மணி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வியாசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களைகோவில் சிவாச்சாரியார்கள் காலையில் சுமந்து சண்முகர் சன்னதிக்கு கொண்டு வந்தனர்.சண்முகர் சன்னதியில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட சுப்பிரமணிய சுவாமி தெய்வானை நாரத மகா முனிவர்,துர்க்கை அம்மன் கற்பக விநாயகர் உள்ளிட்ட மூலவர் விக்ரகங்களுக்கு வேத மந்திரங்கள் மேளதாளங்கள் முழங்க புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பாலாலயம் நடைபெற்றது.

தொடர்ந்து விக்ரகங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.கடந்த ஏழாம் தேதி முதல் மூலஸ்தான நடை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று முதல் சண்முகர் சன்னதியில் வைக்கப்பட்ட மூலவர்களை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.