• Mon. Apr 28th, 2025

பேருந்து குழாயில் மோதி விபத்து பயணிகள் காயம்..,

ByKalamegam Viswanathan

Apr 9, 2025

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அவனியாபுரம் வந்த 10D அரசு பேருந்து மீண்டும் அவனியாபுரத்தில் பயணிகளை ஏற்றுக்கொண்டு ஆரப்பாளையம் சென்று கொண்டிருந்தது.

அவனியாபுரத்தில் அருகே பெரியார் சிலை அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக அரசு பேருந்தை திருப்பியபோது தரைப்பாலம் ஓரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயத்துடன் வெளியேற்றப்பட்டனர். தரைப்பாலம் ஓரத்தில் இருந்த முல்லை – பெரியார் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்து வாகனத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதிரே வந்த இருசக்கர வாகனம் இது மோத கூடாது என அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை திருப்பி அதில் மோதி விபத்துக்குள்ளானது. சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

மாநகர அரசு பேருந்து மோதியதில் முல்லைப் பெரியாறு குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் வீணானது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து உடைந்த குழாயை சீர் செய்தனர்.