• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

நாளை கடையடைப்பு அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு

ByKalamegam Viswanathan

Nov 28, 2024

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து, சோழவந்தானில் நாளை கடையடைப்பு அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு

தமிழக முழுவதும் வாடகை கடைகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து நாளை
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு நடத்தப்படும் என அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது இது குறித்து இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கூறும்போது சோழவந்தானில் உள்ள வணிக நிறுவனங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை 29 11 24 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சோழவந்தானில் உள்ள அனைத்து வணிக கடைகளும் அடைக்கப்படும் என முடிவு செய்துள்ளோம் இதற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர் சோழவந்தான் அனைத்து வியாபாரிகள் நலச் சங்க தலைவர் ஜவகர் செயலாளர் ஆதி பெருமாள் பொருளாளர் கேசவன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதுகுறித்து இன்று மாலை முறைப்படி அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.