போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்யின் ‘வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இப்படத்தின், முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இதுவரை யூடியூபில் 35 மில்லியன் பார்வைகளையும் 1 மில்லியன் லைக்ஸ்களையும் ‘நாங்க வேற மாரி’ கடந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது இரண்டாம் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அம்மா பாடலாக வெளியாகி உள்ள இப்பாடலையும் விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘நான் பார்த்த முதல் முகம் நீ… நான் கேட்ட முதல் குரல் நீ’ என்று அஜித்தின் குரலோடு, சித் ஸ்ரீராம் குரலோடு யுவன் இசையும் கேட்பவர்களைத் தாலாட்டுகிறது. அம்மாவின் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
அஜித் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘வரலாறு’ படத்தில் அம்மா பாசத்தில் உருவான ‘தீயில் விழுந்த’ பாடலுக்கு பிறகு, 15 வருடத்திற்குப் பிறகு மீண்டும் அஜித் படத்தில் அம்மா செண்டிமெண்ட் பாடல் இடம்பிடித்து கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பாடல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.