• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நாளை மறுநாள் சபரிமலை கோவில் நடை திறப்பு

ByA.Tamilselvan

Sep 14, 2022

புரட்டாசி மாதம் வருகிற 18-ந்தேதி பிறப்பதை முன்னிட்டு, சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
18-ந்தேதி மாதப்பிறப்பு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். சபரிமலை கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த முன்பதிவை இது வரை கேரள காவல்துறை செயல்படுத்தி வந்தது. 2010-ம் ஆண்டு முதல் 2011 வரை சபரிமலையில் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த ஏ.டி.ஜி.பி. பி. சந்திரசேகரனால் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கையாள வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் முதல் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செயல்படுத்துகிறது.