• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சமூகவலைத்தளத்தில் வைரல் மன்னனான “ஏகே”.. பரவும் வீடியோக்கள்..

Byகாயத்ரி

Sep 14, 2022

சமீப காலங்களாகவே சமூகவலைதளத்தில் எங்கு திற்நதாலும் ஏகேவின் தரிசனம் தான். அஜித் இங்கு பைக் ரைட் செய்தார், குடும்பத்துடன் சுற்றுலா சென்றார், கோவிலுக்கு சென்றார், லடாக் பயணம் சென்றார் என வீடியோக்கள கொட்டி குவிந்தன.. அதனாலயே அஜித் சில மாதங்களுக்கு வைரவல் மன்னனாகவே வலம் வருகிறார்.

நடிகர் அஜித்துக்கு பைக் ரைட் என்றாலே மிகவும் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே… அஜித் தற்போது ஏகே 61 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஷூட்டிங் இல்லா நேரத்தில் பைக்கை தூக்கிக்கொண்டு ஒரு ரவுண்டு வருகிறார். 2 மாதங்களுக்கு முன் நடிகர் அஜித் அவரின் மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் ஒரு பார்ட்டி விருந்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியது. அந்த புகைப்படம் செம வைரலானது. அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணைய வாசிகளை அலறவிட்டது.

பின் மீண்டும் சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்திலும் அங்கிருந்த பணியாளர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், அங்கிருந்து விமானத்திற்கு பேருந்தில் சென்ற வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது சமீபத்தில் லடாக் ரைட் சென்ற அஜித் அசால்ட்டாக பைக்கை ஓட்டும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் பரவியது. அதுமட்டுமில்லாமல் கார்கில் போர் வீரர்கள் நினைவகத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய புகைப்படங்களும் வெளியானது. இதெல்லாம் போக சுட சுட ஒரு அப்டேட் வீடியோவும் இறங்கியுள்ளது. அதில் நடிகர் அஜித் ஹெலிகாப்டரை இயக்குவது போல் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழ் திரையுலகில் பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் அஜித் தான். தற்போது இந்த வீடியோவும் தீயாய் பரவி வருகிறது.

இப்படி மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது அஜித் சற்று வித்தியாசமானவர் தான். இன்னும் பல வீடியோக்கள் புகைப்படங்கள் ஏகே பற்றி வெளியாகுமென எதிர்ப்பார்பில் ரசிகர்கள் உள்ளனர்.