• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சாலையை சீரமைத்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Mar 14, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மள்ளப்புரம் கிராமத்திலிருந்து தேனி மாவட்டம் மயிலாடும்பாறை வரை சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இரு மாவட்டங்களை இணைக்கும் இணைப்புச் சாலை அமைந்துள்ளது.,

தேனி மாவட்டத்தில் விளையும் பொருட்களை இந்த சாலை வழியாக விருதுநகர், இராஜபாளையம் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்து செல்லவும், மள்ளப்புரம் பகுதியில் விளையும் காய்கறிகளை தேனி, கேரளா உள்ளிட்ட மார்க்கெட் பகுதிக்கு கொண்டு செல்லவும் எளிதான சாலையாக இந்த சாலை அமைந்துள்ளது.,

வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த சாலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிதாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாத சூழலில், பெரும்பாலான பகுதிகள், எஸ் வளைவு போன்ற வளைவு பகுதிகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.,

இந்த சாலையை சீரமைத்து, போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கோரி இரு மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், இரு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள 7 கிராம மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.,

இந்நிலையில் இன்று உசிலம்பட்டி அருகே மள்ளப்புரம் பிரிவில் விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து இந்த மள்ளப்புரம் மயிலாடும்பாறை சாலைக்கு போதுமான நிதி ஒதுக்கி விரைவில் சீரமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,

தமிழ்நாடு அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய கோரியும், வனப்பகுதியில் உள்ள இந்த சாலையை சீரமைக்க இடையூறாக உள்ள வனத்துறையினர் உரிய அனுமதி வழங்க வலியுறுத்தியும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,