சாத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் விசிக தேர்தல் அங்கீகார வெற்றிவிழா பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விசிக தொண்டர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருப்பதால் தான் ஆர் எஸ் எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் அமைதியாக இருக்கிறார்கள் எனவும் இந்த நிலையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தால் ஆர் எஸ் சங்பரிவார் அமைப்புக்கள் எதை வேண்டுமானாலும் செய்வார் கள் என குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழகத்தில் பாஜகவிற்கு வாக்கு சதவீதம் இல்லை என்பதால் எடப்பாடியை முன் நிறுத்தி பாஜக காலூன்ற முயல்கிறது என விமர்சனம் செய்த வன்னியரசு தமிழகத்தில் பாஜக தனித்து நின்றால் டெபாசிட் கூட பெற முடியாது என்றார்.
மேலும் பேசிய வன்னிஅரசு 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தான் ஆர் எஸ் எஸ் பாஜக அமைப்பினர் நடிகர் விஜயை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
மேலும் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் சிறுபான்மையினர் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்காக தான் நடிகர் விஜயை பாஜகவினர் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.
மேலும் நடிகர் விஜய்யை இயக்கிக் கொண்டிருப்பது ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர் என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு குற்றம் சாட்டினார்.
மேலும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சனைகளில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று சீமானுக்கு கேள்வி எழுப்பிய வன்னியரசு வடகாடு பிரச்சனையில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன வன்னியரசு விமர்சனம் செய்தார். மேலும் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமன அதிகார சட்டப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் கஷ்டப்பட்டு நாம் சட்டத்தை இயற்றினால் மக்கள் பிரச்சினை களை கண்டுகொள்ளாமல் அவற்றை பார்ப்பனர் நீதிபதிகள் மூலம் அவற்றை நிறுத்தி வைப்பது என்பது அயோக்கியத்தனமான காரியம் என்றார். மேலும் பேசிய தமிழகத்தில் பாஜக அதிமுக தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளை இயக்குவது ஆர் எஸ் எஸ் தான் என குற்றம் சாட்டினார்.
மேலும் தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கூடியவர்களுக்கும் சனாதனத்தை பாதுகாக்க கூடியவர்களுக்கான போராட்டம் நடைபெறுகிறது.