தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கழக மக்களவை தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஓபி. ரவீந்திரநாத் அவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேனி மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாவட்ட,ஒன்றிய, நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இவ்விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஜீவாதார உரிமையை பறி கொடுக்கக் கூடாது.தமிழக உரிமையை மீட்க அஇஅதிமுக போராடும்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.




