திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி 11 வது வார்டு கள்ளிமேட்டில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் அப்பகுதி முழுவதும் குப்பைகள் மலை போல் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

மேலும் கழிவு நீர் தேங்கி காணப்படுவதால் கொசுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் கள்ளிமேடா குப்பைமேடா என சந்தேகம் எழுந்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்னர்.மேலும் உயர் நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று செயல்பாட்டில் இல்லாமல் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் இல்லாவுட்டால் உயிர் சேதம் ஏற்படும் என்றும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்ததாகவும் கிராம சபையில் குப்பை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்து வரும் அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் இப்பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)