

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் திருத்தலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆதி குரு ஸ்ரீ சங்கராச்சாரியாரின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேதார்நாத்தில் நடைபெறும் இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் மற்றும் 4 சங்கரமடங்களிலும் கானொளி வழியாக அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நடைபெற்ற இந்தக் கானொளி நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
