

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டதன்படி பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மதுரை சிங்காரபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் முத்துக்குமார் (வயது 23). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிற நிலையில், முத்துக்குமார் நேற்று வைத்தியநாதபுரம் காளியம்மன் கோவில் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு சிலர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சாலையை கடக்க விடாமல் முத்துக்குமார் வாகனம் முன்பு பட்டாசுக்களை வெடித்து உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வலுத்து கைகலப்பில் முடிந்தது.
இதில் ஆத்திரமடைந்த கும்பல் முத்துக்குமாரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை இருந்து வருகிறார்.
இதுதொடர்பாக முத்துக்குமார் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது முத்துக்குமாரை கத்தியால் குத்தியதாக வைத்தியநாதபுரம் சக்தி கௌதம், தினேஷ் பவர்சிங், அவரது சகோதரர் விஜயகுமார்உள்பட 11 பேரை கைது செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இவர்கள் மீது காவல்நிலையத்தில் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
